sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 முருகனை மோடி தரிசிப்பது மகிழ்ச்சி: திருமாவளவன்

/

 முருகனை மோடி தரிசிப்பது மகிழ்ச்சி: திருமாவளவன்

 முருகனை மோடி தரிசிப்பது மகிழ்ச்சி: திருமாவளவன்

 முருகனை மோடி தரிசிப்பது மகிழ்ச்சி: திருமாவளவன்

43


ADDED : பிப் 28, 2026 05:33 AM

Google News

43

ADDED : பிப் 28, 2026 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ' 'திருப்பரங்குன்றம் முருகனை பிரதமர் மோடி தரிசிப்பது மகிழ்ச்சி,'' என, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., வில் இணைந்ததன் மூலம் தி.மு.க., விற்கு மட்டுமல்ல அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருக்கிறது.

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முயற்சியை பன்னீர்செல்வம் தொடர்ந்து மேற்கொண்டார். அது நிறைவேறாத நிலையில் அவர் பா.ஜ., வில் சேர நினைக்காமல் தி.மு.க., வில் சேர்ந்து இருக்கிறார் என்பது அவர் மீதான நன்மதிப்பை மேலும் உயர செய்திருக்கிறது. அவர் திராவிட பாரம்பரியத்தில் ஜெயலலிதா போன்ற தலைவர்களோடு பணியாற்றி வளர்ந்தவர். அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் வலதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் மீண்டும் திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது.

பிரதமர் மோடி செல்லும் அனைத்து மாநிலங்களிலும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் அவர் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிப்பது நமக்கு மகிழ்ச்சி. ஆனால் பா.ஜ., வின் அரசியல் கணக்குகளில் இதுவும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்த அரசியல் எடுபடாது. தமிழக மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் மதவெறி அரசியலுக்கு இடம் தர மாட்டார்கள் என்றார்.






      Dinamalar
      Follow us