ADDED : மே 23, 2026 05:10 AM

சென்னை: 'தமிழகத்தில், நீலகிரி, ஈரோடு உட்பட, 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 7 செ.மீ., மழை பெய்து உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து, குமரிக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக தென் மாவட்டங்கள் வழியாக, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
அசவுகரியம் தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே, 27 வரை, மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உ ள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், இன்று அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் காரணமாக, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
மேகமூட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங் களில், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
