தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


UPDATED : மே 26, 2026 06:39 AM

ADDED : மே 26, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2026 06:39 AM ADDED : மே 26, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில், கோவை, நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல், தென் கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல், தமிழக தென்மாவட்டங்கள், மன்னார் வளைகுடா வழியாக, வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று முதல் மே, 29 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us