இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : டிச 04, 2025 01:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.,04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* தூத்துக்குடி
* தென்காசி
* திருநெல்வேலி
* கோவை
* நீலகிரி
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* வேலூர்
* செங்கல்பட்டு
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* சென்னை
* திருவள்ளூர்
நாளை (டிச., 05) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

