கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு
கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு
ADDED : டிச 04, 2025 05:51 AM

சென்னை: துாயமல்லி அரிசி மற்றும் கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடை, வேளாண் வணிக வாரியம் பெற்றுள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாகும், குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படும் அடையாளமாகும்.
உலகின் வெவ்வேறு பகுதிகளில், பல்வேறு வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட இடத்தில் அல்லது பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவை உற்பத்தியாகும் இடத்தின் காரணமாக, சுவை, தரம் போன்ற சிறப்பு குணங்களுடன் தனித்துவமானதாக திகழ்கிறது.
தமிழகத்தில் 2021ம் ஆண்டு முதல், 41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சிகளை, வேளாண்துறையின் கீழ் இயங்கும் வேளாண் விற்பனை வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், துாயமல்லி அரிசி, கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
புவிசார் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் எளிதாக்கப்படுவதுடன், அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

