உள்ளடக்கத்திற்கு செல்ல

கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நாளை(அக்.,01)ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று 15 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 15 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : செப் 30, 2026 03:46 PM

அ நிறம் | அளவு
சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நாளை(அக்.,01)ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இதர மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக்.,01)