தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்று 5 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இன்று 5 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இன்று 5 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

2


ADDED : செப் 28, 2026 02:57 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : செப் 28, 2026 02:57 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப் 28) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப் 29)

ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (செப் 29) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (செப் 30)

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் (செப் 30) ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 1ம் தேதி

நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us