தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை

3


UPDATED : அக் 18, 2026 01:18 AM

ADDED : அக் 18, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : அக் 18, 2026 01:18 AM ADDED : அக் 18, 2026 12:24 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை, 30 செ.மீ., கொட்டி தீர்த்த கனமழையால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில், கோடையை மிஞ்சும் வகையில், மூன்று மாதங்களாக வெயில் வறுத்தெடுத்து வந்ததால், மக்கள் பெரிதும் திண்டாடினர். காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளிலும் சிக்கித் திணறினர்.

இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 6:00 மணிக்கு லேசான மழை தொடங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. நள்ளிரவு 12:00 மணி வரையும் விடாது கன மழை கொட்டித் தீர்த்தது.

வடசென்னையில் மேக வெடிப்பை நினைவூட்டும் வகையில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீடுகள், சாலைகளை மழைநீர் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் மின் தடை ஏற்பட்டதால், மக்கள் திணறினர் .

இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழை காரணமாக, வானில் மேகக்கூட்டம் அதிகமாக திரண்டதால், இரவு 12:00 மணிக்கு மேலும் விடாது, கனமழை தொடர்ந்தது.

ஏற்கனவே, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், 12 செ.மீ., வரை மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி, 30 செ.மீ., வரை பெய்துள்ளது.

தொடரும் மழை


தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மீட்புக்குழுவினர் உஷார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் காரணமின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us