UPDATED : அக் 18, 2026 12:08 AM
ADDED : அக் 18, 2026 12:05 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், முகவரி தெரியாமல் ஆதரவற்ற நிலையில் தவித்த, 75 வயது மூதாட்டியை, செப்., 30ம் தேதி, காவல் கரங்கள் குழுவினர் மீட்டனர். அவரை காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் காவல் நிலையத்தில், ராஜேஸ்வரி, 39 என்பவர், தன் தாய் குப்பம்மாள், 75 என்பவரை, கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை என புகார் அளித்தார்.
விசாரணையில், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட மூதாட்டி என்பது தெரியவந்தது. அவரை வரவழைத்த போலீசார், நேற்று முன்தினம், குப்பம்மாளை, அவர் மகள் ராஜேஸ்வரியுடன் அனுப்பி வைத்தனர்.
