sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவின் டாப் 10 பணக்கார அமைச்சர்கள் பட்டியல் இதோ!

/

இந்தியாவின் டாப் 10 பணக்கார அமைச்சர்கள் பட்டியல் இதோ!

இந்தியாவின் டாப் 10 பணக்கார அமைச்சர்கள் பட்டியல் இதோ!

இந்தியாவின் டாப் 10 பணக்கார அமைச்சர்கள் பட்டியல் இதோ!

9


ADDED : செப் 05, 2025 09:18 AM

Google News

9

ADDED : செப் 05, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் டாப் 10 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. பட்டியலில் ஆந்திரா, கர்நாடகா மாநில அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு பணக்கார அமைச்சர்கள் பற்றி ஆய்வு நடத்தியது. இதற்காக 27 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் என 643 அமைச்சர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது.

அதன் முடிவில் இந்தியாவின் டாப் 10 அமைச்சர்களின் பட்டியலை ஏ.டி.ஆர்., வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஆந்திரா, கர்நாடகா மாநில அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதன் விபரம் பின்வருமாறு:

1. சந்திரசேகர் பெம்மாசானி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா.

சந்திர சேகர் பெம்மாசானி டாக்டர் மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது ஜூன் 2024ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறைக்கான 28வது மாநில அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு 5,705 கோடி ரூபாய்.

2. டி.கே.சிவகுமார், கர்நாடகா துணை முதல்வர், காங்கிரஸ். பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி.

3. சந்திரபாபு நாயுடு, ஆந்திரா முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி. இவர் அதிக நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதல்வர் ஆவார். தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி.

4. நாராயண பொங்குரு, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா.

பொங்குரு நாராயணா இந்திய கல்வியாளர் ஆவார் . அவர் 2014ல் ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சராகப் பணியாற்றினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் கீழ் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாராயணா கல்வி நிறுவனக் குழுவை நிறுவினார். இவரது சொத்து மதிப்பு ரூ.824 கோடி.

5. பைரதி சுரேஷ் (காங்கிரஸ்), கர்நாடகா

பைரதி சுரேஷ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் தற்போது கர்நாடக அரசில் கேபினட் அமைச்சராகவும், ஹெப்பால் எம்எல்ஏயாகவும் பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.648 கோடி.

6. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விவேகானந்த். இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.606 கோடி.

சந்திரபாபு நாயுடு மகன்


7. நாரா லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா.

இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவார். தேர்தலில் போட்டியிடாமல் தந்தை சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் அமைச்சரானதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இவரது சொத்து மதிப்பு ரூ.542 கோடி. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சர் மகன் நர லோகேஷும் 542 கோடி சொத்துக்களுடன் முதல் 10 பணக்கார அமைச்சர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. மங்கள் பிரபாத் லோதா , பாஜ, மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிராவின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மங்கல் பிரபாத் லோதா. இவரது சொத்து மதிப்பு ரூ.447 கோடி.

9. பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி, காங்கிரஸ், தெலுங்கானா

தெலுங்கானாவின் வருவாய், வீட்டுவசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.433 கோடி.

10. ஜோதிராதித்ய சிந்தியா, பாஜ, மத்திய அமைச்சர்

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.424 கோடி.

முதல் 10 பணக்கார அமைச்சர்களில், பாஜ மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் தலா 4 பேர் இடம் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் முதல் 10 பேரில் பாஜவினர் 2 பேர் இடம் பிடித்து இருக்கின்றனர்.

திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியைச் சேர்ந்த திரிபுரா அமைச்சர் சுக்லா சரண் நோட்டியா 2 லட்சம் ரூபாய் சொத்துடன் இந்தியாவின் ஏழ்மையான அமைச்சராக இருக்கிறார். இதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்க அமைச்சர் பீர்பாஹா ஹன்ஸ்டா ரூ.3 லட்சம் சொத்து கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us