தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒழியாது ஒளிந்திருக்கும் லஞ்சம் எனும் பெருச்சாளி!

ஒழியாது ஒளிந்திருக்கும் லஞ்சம் எனும் பெருச்சாளி!

ஒழியாது ஒளிந்திருக்கும் லஞ்சம் எனும் பெருச்சாளி!

1


ADDED : நவ 01, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 01, 2026 06:38 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது சிறப்பு நிருபர்

'இடைநில்லா பேருந்து' எனும் அறிவிப்பு பலகையிலும், 'வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது' எனும் செய்தியிலும் திருப்தியுறும் நாங்கள் தமிழர்கள்; 'தீப ஒளி'யாய் வரும் தீபாவளியே... பதில் சொல்... எங்களின் எந்த இருள் அகற்ற நீ வருகிறாய்?

ஏழரை கேள்விகள்!

1. முதிய நடிகரது உடல் அசையா உதட்டசைவை, 'சிறந்த நடிப்பு' என்று கொண்டாடும் மனங்களிடம், 'தள்ளாத வயதிலும் உடல் வருத்தி உழைத்து உண்ணும் உன் வீட்டு முதியோரை கொண்டாடு' என அறிவூட்ட வருகிறாயா?

2. 'குற்றவாளிகள் தப்பினர்' - அய்யோ; 'தப்பியவர்கள் சிக்கினர்' - அருமை; இந்த 'அய்யோ... அருமைக்கு இடையில், தப்பிச் சென்றவர்கள் நிறைவேற்றிய பணிகள் என்ன' எனும் கேள்விக்கு விடை தரும் திரி கொளுத்த வருகிறாயா?

3. 'விடாமுயற்சியுடன் பொறியியல் படித்து முடித்தேன்' என்ற நம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரது பேச்சில், 'படிப்பிற்கும், பார்க்கும் பணிக்கும் சம்பந்தம் இருக்காது' எனும் உண்மை ஒளிந்திருப்பதை 'விசில்' அடிக்கும் இளைஞர்களுக்கு புரிய வைக்க வருகிறாயா?

4. 'முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது நடவடிக்கை, திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., செய்யும் சதி வேலை' எனும் செய்தி, 'அனுதாபம் உண்டாக்கும் சூழ்ச்சி' என்றுணர்ந்த மனங்களில், நீ இரண்டாவது விளக்கு ஏற்ற வருகிறாயா?

5. ' ஜெயிலர் 2 வசூல், நஸ் ரியாவின் உடை, அனிருத் திருமணம் பற்றி விரல்நுனியில் தகவல் வைத்திருக்கும் இளைஞனே... நம் பெருமைக்குரிய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை எப்படி இருக்கிறது' எனும் கேள்வி எழுப்ப வருகிறா யா?

6. 'பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை என பல கோடி ரூபாய் கரைத்த பிறகும், 'எனது துறை சார்ந்த பிழையால் மக்களுக்கு பாதிப்பெனில் நானே பொறுப்பு' என எந்த அமைச்சரும் சொல்லாதது ஏன்' எனக் கேட்டு சிந்திக்க வைக்க வருகிறாயா?

7. 'தமிழகத்தில் லஞ்சம் ஒழிந்துவிட்டது' என ஆட்சியாளர்கள் பேசும் பெருமை; 'தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் சிக்கும் பணம்' என சில ஊடகங்கள் சொல்லும் உண்மை; 'எதை நாங்கள் நம்புகிறோம்' என அறிந்து கொள்ள வருகிறாயா?

7 ½ ' கரப்பான் பூச்சிகள் ஜாக்கிரதை' என வெளிச்சம் தர வருகிறாயா?

உங்களது கருத்துக்களை கமென்டில் பதிவிடுங்கள் வாசர்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us