கனமழை எச்சரிக்கை எதிரொலி; 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை எதிரொலி; 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : டிச 03, 2025 09:58 AM
ADDED : டிச 02, 2025 07:46 PM

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று(டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக
திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,03) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
* சென்னை
* காஞ்சிபுரம்
* திருவள்ளூர்
புதுச்சேரியிலும் இன்று(டிச.,3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

