தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்
தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்
ADDED : அக் 20, 2025 06:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் உள்ள பழமையான கடைக்கு சென்ற ராகுல், ஜாங்கிரி மற்றும் லட்டு செய்ததுடன், இந்த தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள் என கேட்டுள்ளார்.
பழைய டில்லியில் பழமையான கந்தேவாலா இனிப்புக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடைக்கு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல், ஜாங்கிரி மற்றும் லட்டுவை தயார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பழைய டில்லியில் உள்ள பழமையான காந்தேவாலா இனிப்புக்கடையில் ஜாங்கிரி மற்றும் லட்டுக்களை எனது கைகளாலேயே தயார் செய்து பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கடையின் சுவை இனனும் மாறவில்லை. அதே தூய்மை, பாரம்பரியம் மற்றும் மனதை தொடுவதாக உள்ளது. இந்த தீபாவளியை மக்கள் எப்படி கொண்டாடினீர்கள். இதனை எப்படி சிறந்ததாக மாற்றினீர்கள்? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.