தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் செய்திடாத சாதனை; சிக்சரில் வரலாறு படைத்தது இந்தியா

டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் செய்திடாத சாதனை; சிக்சரில் வரலாறு படைத்தது இந்தியா

டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் செய்திடாத சாதனை; சிக்சரில் வரலாறு படைத்தது இந்தியா

6


UPDATED : நவ 01, 2026 06:14 PM

ADDED : நவ 01, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

6

UPDATED : நவ 01, 2026 06:14 PM ADDED : நவ 01, 2026 04:50 PM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 கிரிக்கெட் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நடந்த கடைசி மற்றும் 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 61 ரன்னும், கேப்டன் ஸ்ரேயாஷ் 50 ரன்னும், நமன் தீர் 33 ரன்னும் எடுத்தனர்.

192 என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து டிம் செய்பெர்ட் (93), கிளென் பிலிப்ஸ் (65) அதிரடியால், 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 11 சிக்சர்களை அடித்தது. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 400 சிக்சரை அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா, 2025ல் 326 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்தியாவின் அதிகபட்ச சிக்சர்களே 289ஆக இருந்தது. 2022ல் சராசரியாக ஒருபோட்டிக்கு 7.2 சிக்சர் என்று இருந்தது. தற்போது சராசரி 10 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர் அடித்த டாப் 10 அணிகளின் விபரம்

அணிகள் - போட்டிகள் - சிக்சர்

1. இந்தியா - 40 - 400

2. ஆஸ்திரேலியா - 36 - 326

3. இந்தியா - 40 - 289

4. பெஹ்ரைன் - 39 - 239

5. வெஸ்ட் இண்டீஸ் - 27 - 238

6. இந்தியா - 26 - 236

7. பாகிஸ்தான்- 34 - 235

8. ஆஸ்திரேலியா - 24 - 221

9. வெஸ்ட் இண்டீஸ் - 20 - 220

10. வெஸ்ட் இண்டீஸ் - 23 - 214

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us