ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம்: 'கேம்பிரிட்ஜ்' ஆய்வில் தகவல்
ராக்கெட் ஏவுதல் செலவு இந்தியாவில் தான் அதிகம்: 'கேம்பிரிட்ஜ்' ஆய்வில் தகவல்
ADDED : ஆக 24, 2026 01:03 AM

புதுடில்லி: நம் நாட்டின் ராக்கெட் ஏவுதல் செலவு, விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ எடைக்கு, 12 லட்சம் ரூபாய் என, மிக அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், குறைந்த செல வில் விண்வெளி சாதனை களை நிகழ்த்தும் நிறுவனமாக, பல ஆண்டுகளாக உலக அளவில் குறிப்பிடப் பட்டு வருகிறது.
பகுப்பாய்வு
இந்நிலையில், ராக்கெட் ஏவுதல் செலவை ஒரு கிலோ எடைக்கு என கணக் கிடும் போது, நம் நாடு அதிக செலவு செய்யும் நாடாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம் பி ரிட்ஜ் பல்கலை பொருளா தார நிபுணர் அலெசியோ டெர்சி, இத்தாலியின் டூரின் பாலிடெக்னிக் பல்கலையைச் சேர்ந்த பிரான்செஸ்கோ நிக்கோலி ஆகியோர் இணைந்து, ராக்கெட் ஏவுதலுக்கான செலவு மற்றும் ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத் தும் செலவு குறித்து ஆய்வு செய்தனர்.
இதற்காக, 1960 - 2025 காலகட்டத்தில் பல நாடுகளின், 6,740க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல்களின் தகவல்களை பகுப்பாய்வு செய்தனர்.
அவர்கள் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையின் விபரம்:
கடந்த 2025ல், ஒரு கிலோ எடையை தாழ் புவி வட்டப்பாதைக்கு செலுத்துவதற்கான உலக சராசரி செலவு, 3.71 லட்சம் ரூபாய்.
அமெரிக்காவில், 3.10 லட்சம் ரூபாய்; ஜப்பானில், 5.08 லட்சம் ரூபாய்; சீனாவில், 5.58 லட்சம் ரூபாய்; ரஷ்யாவில், 6.41 லட்சம் ரூபாய்; ஐரோப்பாவில், 9.50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்தியாவில், இந்த செலவு, 12.77 லட்சம் ரூபாயாக இருந்தது.
விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு கிலோ எடையை சுற்றுப்பாதைக்கு செலுத்துவதற்கான செலவு அதிகமாக உள்ளது.
அமெரிக்காவுடன் ஒப் பிடுகையில், இந்தியா வின் செலவு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவின் இந்த செலவு, அந்நாட்டின் சிக்கனமான விண்வெளி திட்டம் என்ற பொதுவான கருத்துக்கு மாறுபட்டதாக இருக்கலாம்.
முக்கிய காரணி
இந்தியாவின் ராக்கெட்டுகள் பொதுவாக குறைந்த அளவிலான சரக்குகளையே சுமக்கின்றன. இதனால், ராக்கெட் ஏவுதலுக்கான நிலையான செலவுகள் சரக்குகளின் மீது பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால், ஒரு கிலோவுக்கான செலவு அதிகமாகிறது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா வில் ஏவுதல் செலவு ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதற்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக் கெட்டுகளும், நிலையான உட்கட்டமைப்பு செலவுகளை அதிக ஏவுதல்களுக்கு பயன்படுத்துவதும் முக்கிய காரணிகளாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
