சீனாவை பந்தாடிய இந்தியா; பைனலுக்கு முன்னேறி அசத்தல்
சீனாவை பந்தாடிய இந்தியா; பைனலுக்கு முன்னேறி அசத்தல்
ADDED : செப் 06, 2025 10:22 PM

ராஜ்கிர்;பீஹாரில் உள்ள ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. இதன்மூலம், பைனலுக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை பதிவு செய்தது. இந்திய வீரர் ஷிலானந்த் லக்ரா இந்த கோலை அடித்தார். 7வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் மற்றொரு கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், முதல் பாதி ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
2வது பாதியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, கோல் மழை பொழிந்தனர். பதிலுக்கு சீன வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதனால், போட்டியின் முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் இந்திய அணி, கொரியாவை எதிர்த்து விளையாட இருக்கிறது.