தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாஜவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்

பாஜவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்

பாஜவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்

3


ADDED : நவ 21, 2026 10:20 PM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 21, 2026 10:20 PM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுஸ்வேந்திர சாஹல். 36 வயதான இவர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்தார். கடைசியாக 2023 ஆகஸ்ட் 13ல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு, அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் வாய்ப்புக்காக காத்துள்ளார். இவர் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

பாஜவில் கிரிக்கெட் வீரர் சாஹல் இணைந்துள்ளார். அவரை பாஜவின் ஓபிசி பிரிவு செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஓபிசி அணியின் தேசியத் தலைவரும், ராஜ்ய சபா எம்பியுமான அமர் பால் மவுரியாவை சாஹல் சந்தித்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us