தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பிரிட்டனுக்கு குடியேறுவதிலும் வெளியேறுவதிலும் இந்தியர்களே 'டாப்'

பிரிட்டனுக்கு குடியேறுவதிலும் வெளியேறுவதிலும் இந்தியர்களே 'டாப்'

பிரிட்டனுக்கு குடியேறுவதிலும் வெளியேறுவதிலும் இந்தியர்களே 'டாப்'


ADDED : நவ 26, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, குடியேற்றத்தை குறைப்பது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த குடியேற்றத்தால் பொருளாதாரத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள தற்காலிக தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், பிரிட்டனுக்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோர் இடையேயான வித்தியாசமான நிகர குடியேற்றம் 77,000 ஆக கடுமையாக சரிந்துள்ளது.

மேலும், கடந்த செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 31,000 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் விசா காலம் முடிந்து பிரிட்டனை விட்டு வெளியேறிய, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

பிரிட்டனை விட்டு மொத்தம் 85,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இதில் மாணவர்கள் 55,000; பணியாளர்கள் 28,000; பிற பிரிவுகளில் 2,000 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில், 51,000 பேருடன் சீனா உள்ளது.

அதேசமயம், பிரிட்டனில் குடியேறுவோர் பட்டியலிலும் இந்தியர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதன்படி, 77,000 பேர் கல்வி விசாவிலும், 40,000 பேர் பணி விசாவிலும் பிரிட்டனில் குடியேறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us