தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/நேபாள வெள்ளம் மாயமான 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடிவு

நேபாள வெள்ளம் மாயமான 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடிவு

நேபாள வெள்ளம் மாயமான 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடிவு


UPDATED : நவ 26, 2026 07:24 PM

ADDED : நவ 26, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:24 PM ADDED : நவ 26, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன, 213 இந்தியர்களை, இறந்தவர்களாக அறிவிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23-ல், நம் அண்டை நாடான நேபாளம் – திபெத் எல்லையருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, திரிசூலி போடே கோஷி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இது சமீபத்திய ஆண்டுகளில் அந்நாட்டில் நடந்த மிக மோசமான இயற்கை பேரிடராகும்.

இந்த வெள்ளத்தில் சிக்கி 1,453 பேர் உயிரிழந்தனர்; 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

அந்த வெள்ளத்தின்போது நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பல இந்தியர்களும் சிக்கிக் கொண்டனர். இதில் பலர் உயிர் தப்பிய நிலையில், காணாமல் போய் இதுவரை மீட்கப்படாத, 213 இந்தியர்களை இறந்தவர்களாகக் கருதி, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் நடைமுறைகளை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி, 213 பேரின் பெயர்களும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது அல்லது விபரங்களில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், மாயமானோரின் குடும்பத்தினர் வரும் டிச., 2-ம் தேதிக்குள் இந்திய துாதரகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக இ- – மெயில் முகவரி மற்றும் மொபைல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us