தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா அடைந்த மிகப்பெரிய சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா அடைந்த மிகப்பெரிய சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா அடைந்த மிகப்பெரிய சாதனை; பிரதமர் மோடி பெருமிதம்

6


ADDED : நவ 15, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 15, 2026 01:24 PM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் கச்சிரோலியில் நடந்த பிர்சா முண்டாவின் 151வது பிறந்த தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: முந்தைய அரசுகள் பழங்குடியினரைப் புரிந்துகொள்ளவும் இல்லை, அவர்கள் மீது அக்கறை காட்டவும் இல்லை; வறுமையிலிருந்து 50 கோடி மக்கள் மீண்டு வந்திருப்பது தான் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா அடைந்த மிகப்பெரிய சாதனை. நக்சலிசத்தை ஒழித்தது நாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று.

நக்சல் வன்முறையால் பழங்குடியின சமூகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், முந்தைய அரசுகள் அவர்களைத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள விட்டுவிட்டன. பழங்குடியின சமூகங்கள் எப்போதுமே அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன; நக்சல் வன்முறையால் பழங்குடியின சமூகத்தினர் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், முந்தைய அரசுகள் அவர்களைத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்படி விட்டுவிட்டன.

நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இன்றி இருந்த பழங்குடியினர் பகுதிகளை மேம்படுத்துவதற்காக, தனது அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. பழங்குடியினர் சமூகம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களித்து வருகிறது; இன்று, நாட்டை வழிநடத்துபவர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மகள். ஜனாதிபதி திரவுபதி முர்முவை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us