தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி

புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி

புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி

4


UPDATED : நவ 19, 2026 09:20 PM

ADDED : நவ 19, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : நவ 19, 2026 09:20 PM ADDED : நவ 19, 2026 09:19 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (FICCI) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது:

இதற்கு முன்பும் பலமுறை FICCI நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தாலும், இந்த நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது. FICCI அமைப்பு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த அமைப்பு தொடர்ந்து விழிப்புடன் செயல்படுகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னைமேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரப் பயணத்தில் தொடர்ந்து பங்களிப்பது ஒரு மிகப்பெரிய சாதனை.

இந்தியத் தொழில்துறை அடைந்த பெரும் முன்னேற்றங்களுக்கு FICCI சாட்சியாக இருந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியத் தொழில்துறை எத்தகைய சாதனைகளை அடைய முடியும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது

கடந்த 12 ஆண்டுகளில் குடிமக்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் மேற்கொண்ட கடின உழைப்பு ஆகியவற்றால் இந்தியா வேகமாக முன்னேறுகிறது. வறுமையிலிருந்து மக்கள் வெளியேறும் வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவிலும் உள்ளது.

வெறும் 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்த மைல்கல் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறது.இந்தியா இன்று பயணிக்கும் பாதை சரியானது, துல்லியமானது மற்றும் நாட்டின் வெற்றியை உறுதிப்படுத்தும் பாதை என்பதை இது காட்டுகிறது.

மூடிஸ் எஸ் அண்ட் பி குளோபல், பிட்ச் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடுகளை உயர்த்தி வருகின்றன. தனிநபர்கள், தொழில்துறையினர் மற்றும் நாடுகள், ஏற்கனவே உள்ள துறைகள் அல்லது குறுகிய கால லாபங்களை மட்டுமே நம்பியிருக்காமல், அவ்வப்போது சுய பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் .

இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது; அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நமது தொழில்துறை தயாராக இருக்க வேண்டும்: பிரதமர்.அடுத்த 20 ஆண்டுகளுக்கான நீண்டகால முதலீட்டு முடிவுகளில் 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்பதை அடிப்படையாகக் கொள்ளுங்கள். இது நாட்டைச் சுயசார்பு கொண்டதாக மாற்றுவதுடன், வணிக வளர்ச்சிகளுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்

நமது உள்நாட்டுச் சந்தை, உலகளாவிய சந்தைகளில் போட்டியிடுவதற்கான தன்னம்பிக்கையை நமக்கு வழங்க வேண்டும். எனவே, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us