sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்

/

கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்

கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்

கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்


UPDATED : அக் 31, 2025 03:20 AM

ADDED : அக் 31, 2025 03:19 AM

Google News

UPDATED : அக் 31, 2025 03:20 AM ADDED : அக் 31, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடுவோரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு செல்வது போல், பலர் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தாலும், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். புதுப்புது வழிகளில் கடத்தல் நடப்பதால், எந்த வியூகத்தை பயன்படுத்தி பிடிப்பது என்று தெரியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆக., மாத இறுதியில் இருந்து தற்போது வரை சென்னை விமான நிலையத்தில், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, 48 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதிகாரிகள் சிறையில் அடைப்பர். கடத்தல் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க, தனி குழு அமைத்து தேடுவர்.

ஆனால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சரியான முயற்சி எடுக்காமல் இருப்பதே, கடத்தல் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Image 1488769

இது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு, தங்கத்தை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு கமிஷன் தொகை அதிகமாக கிடைக்கிறது. இதனால் புது வியூகங்களை வகுத்து, கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

முன்பு குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகம் கஞ்சா கடத்தப்படும். கடத்தி வருவோரை எங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல் அடிப்படையில் பிடித்து விடுவோம். சமீப மாதங்களாக, கடத்தல்காரர்கள் புது வழிமுறையை பின்பற்றுகின்றனர்.

முன்பு, அதிக அளவில் தாய்லாந்தில் இருந்து நேரடியாக, சென்னை வரும் விமானத்தில் கடத்தல் நடக்கும்; தற்போது தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர்.

கடத்தல்காரர்கள் பிடிபட்டாலும், அவர்களின் சர்வதேச 'நெட்வொர்க்' விபரங்களை கண்டறிவது சவாலாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த இரண்டு மாதங்களில் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கஞ்சா விபரம்:
தேதி கிலோ மதிப்பு ரூபாய் கோடியில் கைது
ஆக.,21 12 12 1
செப்.,13 3 3 1
செப்.,18 12 12 2
அக்.,8 9.5 9.5 3
அக்.,24 10 10 3
அக்.,25 1.5 1.5 1











      Dinamalar
      Follow us