ADDED : அக் 31, 2025 03:17 AM
புன்செய்புளியம்பட்டி:தொடர் மழையால், சந்தைக்கு விற்பனைக்கு வரும் கறவை மாடுகளின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சி கால்நடை சந்தை வாரந்தோறும் புதன், வியாழக்கிழமை கூடுகிறது. தொடர் மழையால் கால்நடைகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாடுகளை விற்பனை செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
நேற்று நடந்த சந்தைக்கு, கடந்த வாரத்தை விட கறவை மாடு உள்ளிட்ட கால்நடைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடுகள், 150 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன.
அனைத்து கறவை மாடுகளும், 60 லட்சம் ரூபாய்க்கு விற்றன. வழக்கமாக சந்தைக்கு, 400 முதல், 600 மாடுகள் விற்பனைக்கு வரும். இந்த வாரம், 350 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

