இணைய சேவைகளில் மீண்டும் பாதிப்பு: மைக்ரோசாப்ட் தலைவர் எச்சரிக்கை
இணைய சேவைகளில் மீண்டும் பாதிப்பு: மைக்ரோசாப்ட் தலைவர் எச்சரிக்கை
ADDED : நவ 23, 2026 10:59 PM

நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'அவுட்லுக்' உள்ளிட்ட சேவைகள், 24 மணி நேரம் முடங்கின. இதனால் சுமார்70 நாடுகளில் கோடிக்கணக்கான பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பவோ, பெறவோ முடியாமல் சிரமப்பட்டனர்.இதற்கு, சைபர் தாக்குதலோ, ஏ.ஜ., காரணம் அல்ல என்று மைக்ரோசாப்ட் விளக்கியது.
செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போது ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், மென்பொருள்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. ஹேக்கர்கள் அந்த ஓட்டைகளை பயன்படுத்தி திருடுவதற்கு முன், நிறுவனங்கள் அவசரமாக புதிய அப்டேட்களை செய்வதால் சேவை முடக்கம் ஏற்படுகிறது.
மேலும் வங்கிகள், ஆப் மற்றும் இணையதளங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரு இடத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் அது அனைத்து சேவைகளையும் ஒரே நேரத்தில் முடக்கிவிடுகிறது.
உலகம் முழுதும் பாதுகாப்பு அப்டேட்களை செய்யும் போட்டி தீவிரமடைந்துள்ளதால் வரும் மாதங்களில் மேலும் பல தொழில்நுட்ப முடக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
