இஸ்ரேலுக்கு ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம்; எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கிறார் நெதன்யாகு
இஸ்ரேலுக்கு ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம்; எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கிறார் நெதன்யாகு
ADDED : நவ 10, 2026 07:39 AM

-நமது நிருபர்-
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், எதிர்க்கட்சியான யாஷார் கட்சித் தலைவர் காடி ஐசென்காட்டை புதிய அரசை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அரபு கட்சிகளுடன் எக்காரணம் கொண்டும் கூட்டு சேர மாட்டோம் என்று ஐசென்கோட் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
நாட்டின் ஒற்றுமைக்காக, புதிய அரசில் இணையும்படி, நெதன்யாகுவுக்கு ஐசன்கோட் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகு, ஐசன்கோட்டுடன் கைகோர்க்கத் தயாராக இருக்கிறேன்.
இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவாலின் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம், ஈரான் மற்றும் தீவிர இஸ்லாத்தை ஆதரிப்பவர்கள் உடன் ஒரு அரசை அமைக்க முடியாது.
ஹமாஸ் ஆதரவாளர்களைக் கொண்டு உங்களால் அரசை அமைக்க முடியாது. தீவிர இஸ்லாமிய ஆதரவாளர்களைச் சார்ந்திருந்தால், ஈரானையும் அதன் ஆதரவாளர்களையும் உங்களால் எதிர்த்துப் போராட முடியாது.
புறக்கணிப்புகளை விரும்பினாலும் நமக்கு முன்னால் உள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றுபட வேண்டும். இது குறித்து நாம் கலந்துரையாடி, இறைவனின் உதவியுடன் தேவையானதைச் செய்வோம்.
இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.
