சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
UPDATED : டிச 22, 2025 06:51 PM
ADDED : டிச 22, 2025 06:45 PM

புதுடில்லி: தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக ஊடுருபவர்களை அகற்றுவது நமது பொறுப்பாக இருக்க வேண்டும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடியேற்றம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது, அவர்கள் வங்கதேசம் வழியாக சட்டவிரோதமாக வந்தனர்.
போலி ஆவணங்களை உருவாக்கி, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், காங்கிரஸ் அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் ஆதரித்தது. அவர்கள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேற வழிவகை செய்தது.
வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இல்லை என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. சட்டவிரோத மாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும்இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

