ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை: சீன ஆயுதங்கள் பறிமுதல்
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை: சீன ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : நவ 21, 2025 08:54 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் சீன கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நவ்காம் செக்டாரில் உள்ள வனப்பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் குழுவாக இணைந்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த மறைவிடத்தை கண்டறிந்தனர். சோதனை நடத்திய போது, ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் அங்கு இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்.
அவற்றில் 2 எம் ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 2 சீன கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவத்தினரும், போலீசாரும் தெரிவித்தனர்.

