தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவுறுத்தல்
தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவுறுத்தல்
ADDED : டிச 17, 2025 10:21 PM

புதுடில்லி: 'தீர்ப்பு வழங்கும்போது நீதிபதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பி.ஆர்.கவாய் கூறியதாவது: விஷயங்களைத் தீர்மானிக்கும்போது, நீதிபதிகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். தீர்ப்பு வழங்கும்போது, ஓரளவு நிதானம் மிகவும் அவசியம், ஏனென்றால் நான் ஒரு முறை நீதிமன்றத்தில் ஒரு முறை வழக்கு விசாரணையின் போது சொன்னது, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
தீர்ப்புகளை வழங்கும்போது நீதிபதிகள் எதிர்க்கிறார்களா அல்லது ஆதரிக்கிறார்களா என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படக்கூடாது. நீதிபதிகள் தங்கள் முன் உள்ள உண்மைகளின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும், அரசியலமைப்பின் அடிப்படையிலும் விஷயங்களைத் தீர்மானிக்க வேண்டும். நான் எதிர்க்கப்பட்டேனா அல்லது விரும்பப்பட்டேனா என்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
நீதிபதிகள் சில வார்த்தைகளைச் சொன்னபோது சமூக ஊடகங்கள் அச்சுறுத்தலாக மாறிவிட்டன. எப்படியிருந்தாலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகள் மூலம் பேச வேண்டும். பல்வேறு மன்றங்களில், நான் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பார்லிமென்ட் மற்றும் நீதித்துறை உயர்ந்தவை அல்ல என்று நான் கூறினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது, சட்டசபை- பார்லிமென்ட், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. இவ்வாறு பி.ஆர்.கவாய் கூறினார்.

