UPDATED : செப் 08, 2025 09:04 PM
ADDED : செப் 08, 2025 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி, அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்க்கு 10 நாள் கெடு விடுத்தார்.
இதனை தொடர்ந்து இபிஎஸ், செங்கோட்டையனை அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் செங்கோட்டையன் இன்று ஹரித்வாருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதாக கூறி சென்றார்.இன்று இரவு டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.