கரூர் துயரத்தை விவரிக்க முடியாது: கனத்த இதயத்துடன் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
கரூர் துயரத்தை விவரிக்க முடியாது: கனத்த இதயத்துடன் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
UPDATED : செப் 28, 2025 04:29 AM
ADDED : செப் 28, 2025 04:23 AM

கரூர்: கரூர் அரசு மருத்தவமனையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
மிகுந்த துயரத்துடன் கனத்த இதயத்துடன் பேசுகிறேன்.
நேற்று இரவு 7.45மணி அளவில் அதிகாரிகளுடன் பேசிக்கொடிண்ருந்தபோது கரூரில் அரசியல் பிரசாரத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது.
உடனடியாக முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பினேன். அடுத்ததாக கலெக்டரை தொடர்புகொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.
அடுத்தடுத்து மரணச்செய்தி அதிகமானதால் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன். அன்பில் மகேஷ், மற்றும் டி.ஜி.பி.,யை அனுப்பி வைத்தேன்.
அடுத்தடுத்த வந்த துயரச்செய்திகள் எனது மனதை கலங்கடித்தது. மூத்த அமைச்சர் எ.வ.,வேலுவுடன் தலைமை செயலகத்தி்ல் ஆலோசனை நடத்தினேன்,.
குழந்தைகள் 10பேர், பெண்கள் 16பேர், ஆண்கள் 13பேர் உயிரிழந்துள்னளர்.
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டதி்ல் இத்தனை பேர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது.
இறந்தவர்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்வேன். இறந்தவர்களுக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும்,
தொலைக்காட்சியில் இந்த கொடுரமான காட்சிகளை கண்டபோது என்னால் பார்த்கொண்டு இருக்க முடியவில்லை உடனே கிளம்பி வந்துவிட்டேன். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்/
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.