லண்டன் வீதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: இந்திய வம்சாவளியினர் கொண்டாட்டம்
லண்டன் வீதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: இந்திய வம்சாவளியினர் கொண்டாட்டம்
ADDED : செப் 07, 2025 11:42 AM

லண்டன்: லண்டனில் இந்திய வம்சாவளியினர் ஏராளமான பேர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம், பல்வேறு நாட்டினரையும் ஆச்சர்யப்படுத்தியது.
விநாயகர் சதுர்த்தி விழா, உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இந்த விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசர்ஜன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆட்டம், பாட்டம் என பக்தி மற்றும் கொண்டாட்ட மனதுடன் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் விநாயகர் சிலைக்கு பூஜை செய்தனர்.
பின்னர் லண்டன் நகர வீதிகளில் பக்தி மணம் கமழ, மேள, தாளங்கள் முழங்க குழுவாக சென்றனர். அங்குள்ள நீர்நிலை ஒன்றில் விநாயகர் சிலையை பக்தி முழக்கங்களுடன் விசர்ஜனம் செய்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வை அதில் பங்கேற்ற ஒருவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். நுாற்றுக்கணக்கான பேர் பங்கேற்ற இந்த ஊர்வலம் மற்றும் விசர்ஜனம், லண்டனில் வசிக்கும் பிற நாட்டினரை ஆச்சர்யப்படுத்தியது.