இன்று இரவு சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு
இன்று இரவு சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு
UPDATED : செப் 07, 2025 07:40 PM
ADDED : செப் 07, 2025 07:34 PM

சென்னை: இன்று இரவு முழு சந்திரகிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள் நடைசாற்றப்பட்டு உள்ளன.
இந்திய நேரப்படி இன்றிரவு இரவு 9.57 மணி முதல் திங்கள்கிழமை(செப்.8) நள்ளிரவு 1.27 மணி வரை நீடிக்கும். இது மிக நீண்ட சந்திர கிரகணமாகும்.சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில், காணப்படும் முழு சந்திர கிரகணம் 11.42 மணி முதல் 12.33 மணி வரை நடக்கும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான கோவில்கள் நடை அடைக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளைமாலை 4:00 மணிக்கு அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்பட்டது.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோயிலில் மாலை 6:00 மணியுடன் அனைத்து பூஜைகளும் முடிக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. கூடலழகர் பெருமாள் கோயில் மாலை 4:00 மணிக்கு நடைசாத்தப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நடையும் மாலை 4 மணிக்கு சாத்தப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நடைசாற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நடை மாலை 6 மணிக்கும் , குமரகோட்டம் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் மதியம் 1 மணிக்கும்
கச்சபரேஸ்வரர் கோவில் நடை மாலை 6:30 மணிக்கும், சென்னிமலை சுப்பரிமணியசுவாமி கோவில் நடை மாலை 6 மணிக்கும்சேலம் சுகவனேஸ்வரர் கோவில் இரவு 7: 30 மணிக்கும்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மாலை 5: 00 மணிக்கும்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோவில் மதியம் 2 மணிக்கும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நடை மதியம் 1:00 மணிக்கும்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் 2 : 00 மணிக்கும்
திருப்பூர் மாவட்டத்தில் சிவாலயங்கள் மதியத்துடனும் நடை அடைக்கப்பட்டு உள்ளன.
வீரராகவ பெருமாள் கோவில்,விஸ்வேஸ்வரர் கோவில்,
திருத்தணி, திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்கள் நடை மட்டும் அடைக்கப்படவில்லை. அங்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சை பெரிய கோவிலிலும் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பதி மற்றும் கேதார்நாத்திலும் சந்திர கிரகணம் காரணமாக நடை அடைக்கப்பட்டுள்ளது.