sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்து மரபுகளை கேலி செய்யும் கொடுமை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பவன் கல்யாண் காட்டம்

/

ஹிந்து மரபுகளை கேலி செய்யும் கொடுமை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பவன் கல்யாண் காட்டம்

ஹிந்து மரபுகளை கேலி செய்யும் கொடுமை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பவன் கல்யாண் காட்டம்

ஹிந்து மரபுகளை கேலி செய்யும் கொடுமை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பவன் கல்யாண் காட்டம்


ADDED : டிச 05, 2025 08:39 PM

Google News

ADDED : டிச 05, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயவாடா: ஹிந்து மரபுகள் மற்றும் சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. மற்ற மத நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதையே செய்யத் துணிகிறார்களா என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். தமிழ் மாதமான கார்த்திகையில் மலையின் மேல் தீபம் ஏற்றும் வழக்கம் ஹிந்துக்களின் பண்டைய நாகரிகம் ஆகும். இன்று பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றவும், தங்கள் சடங்குகளைச் செய்யவும் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட வேண்டியது வருத்தமாகவும், முரண்பாடாகவும் இருக்கிறது. ஒரு தீர்க்கமான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் தங்கள் சொந்த சொத்தில் ஒரு எளிய அமைதியான சடங்கைச் செய்ய முடியாவிட்டால், சொந்த நாட்டில் உண்மையிலேய அரசியலமைப்பு நீதியை எங்கு பெறுவார்கள்.

சுருக்கமாகவும், எளிமையாகவும் சொன்னால், சென்னை ஐகோர்ட் தீபம் ஏற்றும் நமது உரிமையை உறுதிப்படுத்தியது. முதலில் ஒரு நீதிபதியாலும், பிறகு இரு நீதிபதிகள் அமர்வாலும் உறுதி செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக போராட்டம் வெற்றி பெற்றது. இருப்பினும் நடைமுறையில் நம்மை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம் என்ற கசப்பான உண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளட்டும்.

உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக மாற்ற முடியுமா? ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்துக்கு மாற்ற முடியாது. ஏனென்றால் மத நேரத்தின் புனிதத்தன்மை மற்றும் ஒவ்வொரு மத அட்டவணை ஆகியவை சமரசம் செய்ய முடியாதவை.

ஆனாலும் சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை புனிமான கார்த்திகை தீபம் திருடப்பட்டு, மறைந்துவிட்டது ஏன்? ஏனென்றால் ஹிந்துக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் அரசாங்கம், சில நேரங்களில் நிர்வாகம், சில நேரங்களில் அரசு சாரா நிறுவனங்கள், சீரற்ற அறிவுசார் குழுக்கள் மூலம் ஒவ்வொரு முறையும் ஏற்படும் இழப்பை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்வது ஹிந்துக்கள் தான். நாம் உரிமையை பெற்றோம். ஆனால், சடங்கை இழந்தோம்.

தொடர்ச்சியாக, முறையான மறுப்புதான் நீதிமன்றத்தின் தலையீடுகளை நாட வேண்டிய நேரம் வந்தது. பக்தர்கள் தங்கள் சொந்த கோயில்களையும் மத விவகாரங்களையும் தீவிரமாக நிர்வகிக்கும் தனாதன தர்ம ரக்ஷா வாரியம் நமக்குத் தேவை. ஹிந்து மரபுகள் மற்றும் சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. மற்ற மத நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதையே செய்யத் துணிகிறார்களா

அரசியல் சட்டப்பிரிவு 25 ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமையாக இல்லாமல் விருப்ப உரிமையாக மாறுமா ? ஒரு போலீஸ் கமிஷனர் அல்லது கலெக்டர் ஒரு தலைபட்சமாக ஒரு குறிப்பிட்ட ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய முடியுமா? சட்டப்பூர்வமான சொந்த நிலத்தில் தீபம் ஏற்றுவது தீங்கற்ற மதச்செயல் என்று ஐகோர்ட் உறுதி செய்தால், இந்த நடைமுறை வகுப்பு நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்று யார் முடிவு செய்கிறார்கள்?. எந்த சட்ட வழிமுறையை பின்பற்றுகிறார்கள்? அறிநிலையத்துறை எவ்வாறு மீண்டும் மீண்டும் ஹிந்து பக்தர்களின் நலன்களுக்கும், அவர்களன் கோயில் மரபுகளுக்கும் எதிராக செயல்படுகிறது?. மேலும் இந்த அதிகாரிகள் எவ்வாறு தீவிரமான வெறுப்புணர்வைத் தவிர்க்கிறார்கள்?

மத பிரச்னைகள் எழும்போது ஆபிரஹாமிய மதங்களை பின்பற்றுபவர்கள் காட்டும் கூட்டு மனப்பான்மை மற்றும் ஒற்றுமையை ஹிந்துக்கள் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக தங்கள் இன , பிராந்திய மற்றும் மொழி வேறுபாடுகளை வென்று வருகிறார்கள்.

ஹிந்துக்கள் ஜாதி, பிராந்திய மற்றும் மொழியியல் தடைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வரை ஹிந்து மதம் மற்றும் அதன் நடைமுறைகளுக்கு எதிரான கேலி, அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடரும். நமது நாட்டில் உள்ள ஹிந்துக்கள் ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் ஹிந்து தர்மத்தின் கூட்டுமனப்பான்மையுடன் ஒன்றுபடவில்லை என்றால் இந்த மனப்பான்மை தொலைந்துவிடும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் காமாக்யா முதல் துவாராக வரையிலும் உள்ள ஒவ்வொரு ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானத்தைப் பார்த்து விழித்தெழும் ஒரு நாளை நான் நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பவன் கல்யாண் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us