ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் அறிகுறி: பாதுகாப்பு மண்டலமானது மலப்புரம்
ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் அறிகுறி: பாதுகாப்பு மண்டலமானது மலப்புரம்
ADDED : நவ 08, 2025 11:15 PM

மலப்புரம்: கேரளாவில் இறந்த காட்டுப்பன்றியின் உடலில், ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மலப்புரம் மாவட்டத்தின் சில பஞ்சாயத்துக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேர ளா வின் மலப் புரம் மாவட்டத்தில் உள்ள மருதா பகுதியில், காட்டுப்பன்றியின் சடலம் கிடந்தது. அதை சோதனை செய்தபோது, பன்றி உடலில் ஆப்ரிக்க பன்றி வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்தது .
இந்த பன்றிக்காய்ச்சல் மற்ற பன்றிகளுக்கு தொற்றும் என்பதால், மருதாவையொட்டிய, 10 கி.மீ., சுற்றுப்பகுதியை கண்காணிக்கப்பட்ட பகுதி யாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலப் புரம் கலெக்டர் வினோத் கூறியதாவது:
ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து, மருதாவை சுற்றியுள்ள வாலிக்கடவு, எடக்கரா, பொதுக்கல்லு, சுங்கதரா, கருளை, முத்தேடம் போன்ற கிராமப் பஞ்சாயத்துக்கள் கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி, ஒரு கி.மீ., சுற்றளவுக்கு பன்றி பண்ணைகள் எதுவும் இல்லாததால், பன்றிகளை கருணை கொலை செய்ய வேண்டியதில்லை.
எனினும் இந்த மண்டலத்துக்குள் பன்றிகளை விற்பனை செய்யவோ, மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வேறு எங்காவது பன்றிகளுக்கு இந்த வைரஸ் அறிகுறி தெரிந்தால், மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இந்த காய்ச்சல் வேறு விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது என்பதால், அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

