sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

/

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்

5


UPDATED : டிச 20, 2025 11:57 AM

ADDED : டிச 20, 2025 09:57 AM

Google News

5

UPDATED : டிச 20, 2025 11:57 AM ADDED : டிச 20, 2025 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.

பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் ,69. இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததார். இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவர் பிரபல இயக்குநர் வினித் சீனிவாசன் தந்தை. இவர் 225 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் லேசா லேசா, இரட்டை சுழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிந்தா விஸ்டயாய ஷியாமலா படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். நடிகர், இயக்குநர், வசனகர்த்தா என பன்முகத் திறமைக் கொண்ட சீனிவாசன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சீனிவாசன்?

* கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகில் உள்ள பட்டியத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்த சீனிவாசன் மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராக உருவெடுத்தார். இவர் தனது வாழ்க்கையில் ஏராளமான கவுரவங்களை பெற்றார்.

* இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் 6 கேரளா மாநில திரைப்பட விருதுகளை பெற்றார். பெரும்பாலும் இவர் நடித்த படங்களில் அவரது கேரக்டர் சாதாரண மனிதனை போல் தோற்றம் தான் ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கியது.

* சினிமாவை தாண்டி, சீனிவாசன் தயாரிப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு மனைவி விமலா மற்றும் வினீத், தயான் என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பட்டப்டிப்பு வரை படித்த சீனிவாசன் சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இதே திரைப்படக் கல்லூரியில் ரஜினியும் இவருடன் படித்தார்.

* 1976ல் மணிமுழக்கம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்தார். சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடத்தில் நடித்துள்ளார்.

* ஓடறுதம்மாவ அலரியம், சன்மனசுள்ளவர்க்கு சமாதானம், காந்திநகர் 2வது தெரு, நாடோடிக்கட்டு, பட்டணபிரவேசம், தலையணை மந்திரம், சண்டேசம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதி உள்ளார்.

* இவர் கதை எழுதிய ‛காந்திநகர் 2வது தெரு', ‛கத பறையும் போழ்' உள்ளிட்ட படங்கள் தமிழில் ‛அண்ணாநகர் முதல்தெரு, குசேலன்' என ரீ-மேக் ஆனது.

* வடக்குநோக்கியந்திரம், சிந்தவிஷ்டாய ஷியாமளா ஆகிய இரு படங்களையும் இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றன. சிந்தவிஷ்டாய ஷியாமளா படம் தான் தமிழில் சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி என்ற பெயரில் ரீ-மேக் ஆனது.

* 2019ம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். 2020க்கு பிறகு இவர் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

* தமிழில் பார்த்திபன் நடித்த புள்ள குட்டிக்காரன் மற்றும் பிரியதர்ஷின் இயக்கிய லேசா லேசா என இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ள சீனிவாசன் வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்கவில்லை.

ரஜினிகாந்த் இரங்கல்

மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பிலிம் இன்ஸ்டியூட்டில் அவர் எனது கிளாஸ்மேட். அருமையான நடிகர், நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.



அஞ்சலி

மருத்துவமனையில் இருந்து சீனிவாசன் உடல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கந்தநாட்டில் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதியம் 1 மணி முதல் 3 மணி வரை எர்ணாகுளம் டவுன் ஹாலில் வைக்கப்படும். அவரது மகன்கள் கொச்சி வந்த பிறகு இறுதிச்சடங்குகள் குறித்து முடிவு செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us