ஜி.எஸ்.டி., சீர்திருத்த நடவடிக்கைக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு
ஜி.எஸ்.டி., சீர்திருத்த நடவடிக்கைக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு
ADDED : செப் 08, 2025 12:49 AM

கலபுரகி: ஜி.எஸ்.டி., விகிதத்தை மத்திய அரசு குறைத்து இருப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம், கலபுரகியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அளித்த பேட்டி:
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்து இருப்பது ஏழைகளுக்கு பயன் அளிக்கும் என்பதால், என் ஆதரவை தெரிவிக்கிறேன்.
விரிசல் மத்திய அரசை விமர்சிக்க மாட்டே ன். ஆனால் எட்டு ஆண்டுக்கு முன்பே, ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்கும்படி கூறினோம்; அவர்கள் கேட்கவில்லை.
தான் என்ன நினைத்தாலும் அது நடக்கும் என்ற ஆணவம், பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. அது தான் அவரது பிரச்னை.
வெளியுறவு கொள்கையில் இந்தியா பல ஆண்டுகளாக பின்பற்றும் அணிசேரா கொள்கையை அவர் புறக்கணித்து விட்டார். அமெரிக்க அதிபர் டிரம்புக்காக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று, மோடியிடம் எங்கள் சார்பில் கூறினோம்.
ஆனால், டிரம்பை தன் நெருங்கிய நண்பர் என்றார். இப்போது அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டை தான் முதலில் முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் பிரதமர் மோடி, தன்னைத்தானே முதன்மைப்படுத்தி கொள்கிறார். நான் தான் எல்லாம் செய்கிறேன் என்று பேசுகிறார்.
இவருக்கு முன் பிரதமராக இருந்த யாரும் அப்படி பேசியது இல்லை.
முதலில் அவர் தன் ஈகோவை கைவிட வேண்டும். அனைத்து கட்சியினரையும் நம்பிக்கைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
ஓட்டுச்சீட்டு சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது, பா.ஜ., தலைவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, ஓட்டுச்சீட்டு மீது ஏன் இல்லை.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டுசீட்டை பயன்படுத்தி, தேர்தல் நடத்த கர்நாடக அரசு முன்வந்துள்ளது நல்ல விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயியிடம் கடுகடு
ப்பு
கலபுரகியில் நடந்த நிகழ்ச்சியில், மழை வெள்ளத்தில் கலபுரகி மாவட்டத்தில் தன் விளைநிலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக, விவசாயி ஒருவர், மல்லிகார்ஜுன கார்கேயிடம் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கார்கே, ''உனது நிலம் வெறும் 4 ஏக்கர்தான், எனக்கு 40 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது. இது, மூன்று குழந்தைகள் பெற்ற ஒருவர், ஆறு குழந்தைகள் பெற்றவரிடம் வாழ்க்கை போராட்டத்தை கூறுவது போல் உள்ளது. ஆகையால், விளம்பரத்துக்காக புகார் கூற வராதீர்கள். இந்த நெருக்கடியில் இருந்து நீங்கள் மீள முடியும்,'' என, கூறினார்.