தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்: ரூ.66,000 கோடி இழப்பு

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்: ரூ.66,000 கோடி இழப்பு

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்: ரூ.66,000 கோடி இழப்பு

3


ADDED : நவ 14, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 14, 2026 06:30 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​வாஷிங்டன்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களின் அன்றாடப் பணிகளை முடக்கிய அவுட்லுக், டீம்ஸ் மற்றும் கோபைலட் சேவைகளின் தொழில்நுட்பக் கோளாறுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

​அமெரிக்க நேரப்படி, வியாழக்கிழமை காலை 10:40 மணி அளவில் (இந்திய நேரப்படி இரவு சுமார் 10:30 மணி) வட அமெரிக்காவில் டீம்ஸ் சேவையில் தொடங்கிய இந்தத் தொழில்நுட்பச் சிக்கல், பின்னர் உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் 365, எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மெயில் சேவைகளை முடக்கியது. அடுத்த ​ஒரு மணி நேரத்திற்குள், 74 நாடுகளில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் வியாழக்கிழமை இரவு 11:21 மணி அளவில் பாதிப்பு உச்சத்தை எட்டியது.

​மன்னிப்பு கோரிய மைக்ரோசாப்ட்:


​சுமார் 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேவைகள் சீரடைந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தச் சம்பவத்தால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். ​இது சைபர் தாக்குதல் அல்லது ஏஐ ஏஜென்ட்களால் எற்பட்ட பிரச்னை கிடையாது. தொழில்நுட்பக் கோளாறே இதற்கு முழுமையான காரணம். ​அடிப்படைப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

ரூ.66,000 கோடி இழப்பு?


​அமெரிக்காவின் 'ஆண்டர்சன் எகனாமிக் குரூப்' மதிப்பீட்டின்படி, வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 5.1 கோடி பயனர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட உற்பத்தித் திறன் இழப்பு, சுமார் 7 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66,000 கோடி) இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

​பாதுகாப்பு எச்சரிக்கை


​சேவைகள் மீண்டும் தொடங்கும் இந்த நேரத்தில், தொழில்நுட்ப உதவி மையம் போல் நடித்து, பாஸ்வேர்டுகளை திருடும் மோசடி மெயில்கள் வரக்கூடும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், தாமதமாக வந்து சேரும் மெயில்களில் உள்ள லிங்குகளை, கவனமாகப் பார்த்து ஓப்பன் செய்யுமாறு, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us