சமூக வலைதளத்தில் அதிக வரவேற்பை பெற்ற மோடியின் பதிவுகள்!
சமூக வலைதளத்தில் அதிக வரவேற்பை பெற்ற மோடியின் பதிவுகள்!
ADDED : டிச 19, 2025 06:49 PM

நமது சிறப்பு நிருபர்
இந்தியாவில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிக வரவேற்பை பெற்ற 10 பதிவுகளில், பிரதமர் மோடியின் பதிவுகள் 8 இடம் பெற்றுள்ளன.
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளம் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. எக்ஸ் சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை அதிகளவு பிரதமர் மோடியின் பதிவுகள் பெற்றுள்ளது. இம்மாதத்தில் அதிக வரவேற்பை பெற்ற 10 பதிவுகளில் பிரதமர் மோடியின் பதிவுகள் 8 இடம் பெற்றுள்ளன.
எக்ஸ் தளம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரங்களின் படி, கடந்த ஒரு மாதத்தில் இந்திய அளவில் வைரலான பதிவுகளில், பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்பை அதிபர் புடினுக்கு மோடி வழங்கும் பதிவு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பதிவை 67 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். மேலும் 2.31 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த பதிவு 29 ஆயிரம் பயனர்களால் திரும்ப பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி டில்லியில் அதிபர் புடினை வரவேற்ற மற்றொரு பதிவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது, இந்த பதிவு 1.06 கோடி பயனர்களை கவர்ந்துள்ளது. 214K பயனர்கள் லைக் செய்துள்ளனர். அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகம் மற்றும் விளையாட்டுத் துறையிலும் மோடி வெளியிட்ட பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றியது தொடர்பான பதிவை 1.40 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மோடியின் பதிவு 1.47 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.நாட்டில் அதிகம் வரவேற்பை பெற்ற 10 பதிவுகளில் வேறு எந்த அரசியல்வாதியின் பதிவுகளும் இடம்பெறவில்லை. பிரதமர் மோடியின் செல்வாக்கு சமூக வலைத்தளத்தில் குறையாமல் இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. உலகளவில் அதிகம் பேர் பின்தொடரும் அரசியல் பிரமுகர்களில் ஒருவராக, பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

