விமானம் இயக்க இரண்டு முறை தடை விதிக்கப்பட்ட ஓமன் துணை விமானி
விமானம் இயக்க இரண்டு முறை தடை விதிக்கப்பட்ட ஓமன் துணை விமானி
ADDED : அக் 07, 2026 08:26 PM

- சிறப்பு நிருபர்-
பிளைதுபாய் விமானத்தை கடத்த சதி செய்த துணை விமானி அல் ஹம்மாமி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.
ஓமனில் பிறந்தாலும் அவர் வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலேயே வசித்து வந்துள்ளார். பயங்கரவாத குழுக்கள் மீது ஆர்வம் காட்டினார். சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத குழுக்கள் தொடர்பாக கவனித்து வந்துள்ளார். இதனால், அவர் ஓமனில் விமானம் இயக்க அனுமதிக்கப்படவில்லை.
இதன் பிறகு மொராக்கோ நாட்டின் ஏர் மொராக்கோ நிறுவனத்தில் துணை விமானியாக இணைந்து பயிற்சி பெற்றார். இதன் பிறகு அவரை பணியாற்ற அனுமதி கிடைக்கவில்லை. பயங்கரவாதம் குறித்த அவரது கருத்துகளை அறிந்த அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதன் பிறகு ஏழு மாதங்களில் அவர் பிளை துபாய் நிறுவனத்தில் இணைந்தார். அவரின் பின்னணி குறித்து சோதனை செய்யாததை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
