டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்த கோரிக்கை
டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்த கோரிக்கை
UPDATED : அக் 07, 2026 10:26 PM
ADDED : அக் 07, 2026 08:26 PM
புதுச்சேரி: அரசு தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, காங்., சிந்தாந்த துறை தலைவர் பிரதீஷ்இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செய்து வருகிறது. நகர்புறங்கள், கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலை ஓரங்கள், வாய்க்கால்கள், காலி மனை மற்றும் கொசு உற்பத்தியாகும் இடங்களில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேங்கிய மழை நீர் மற்றும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், குடியிருப்பு பகுதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட குழந்தைகள் கூடும் இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தசரா நெருங்கி வருவதால், புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். மக்கள் கூடும் இடங்களில் துாய்மைப்பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
டெங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழைக்காலம் நெங்குவதால் இது மேலும் அதிகரிக்கும். அரசு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
