sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

/

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுகின்றனர்: போலீசார் ஆய்வில் தகவல்

12


ADDED : அக் 15, 2025 05:49 AM

Google News

12

ADDED : அக் 15, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர்களில், ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களில் இலங்கை மற்றும் நைஜீரிய நாட்டவர்களும் அதிகளவில் இருப்பது, போலீசார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்திற்குள், கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலில், ஆந்திரா, கேரளா என, 11 மாநிலங்களை சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, இலங்கை, நைஜீரியா, சூடான், செர்பியா, கென்யா, கானா, தான்சானியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், 'சிந்தடிக்' எனும் மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், ஹெராயின், கோகைன், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.

சர்வதேச போதைப்பொருள் கும்பலின், 'நெட்ஒர்க்' குறித்து, இ.பி.சி.ஐ.டி., எனும் அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தலில் கைதான வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து ஆய்வு செய்ததில், ஒடிசா, ஆந்திரா, மற்றும் கேரள மாநிலத்தவர்களும், நைஜீரியா, இலங்கையை சேர்ந்தோரும் அதிகம் இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில்
கைதான வெளி மாநிலத்தவர்கள்
மாநிலம் கைது சிறையில் ஜாமினில் தலைமறைவு பிடியாணையில்
ஆந்திரா 447 62 340 21 24
கேரளா 662 109 540 6 7
ஒடிசா 892 109 760 4 19
பீஹார் 386 22 359 3 2
மேற்கு வங்கம் 322 25 292 4 1
அசாம் 133 9 122 1 1
உ.பி., 63 6 56 0 1
ஜார்க்கண்ட் 45 6 39 0 0
திரிபுரா 111 9 94 1 7
கர்நாடகா 143 25 112 6 0
புதுச்சேரி 103 1 102 0 0
மொத்தம் 3,307 383 2,816 46 62



2020 முதல் 2025 செப்டம்பர் வரையிலான
ஐந்து ஆண்டுகளில் கைதான வெளிநாட்டினர்
நாடுகள் எண்ணிக்கை
இலங்கை 21
நைஜீரியா 31
சூடான் 3
தான்சானியா 1
அமெரிக்கா 1
செர்பியா 1
செனகல் 2
உகாண்டா 1
கென்யா 1
கானா 1
ருவாண்டா 1














      Dinamalar
      Follow us