தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/புதன் கோளின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது பெப்பிகொலம்போ விண்கலம்

புதன் கோளின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது பெப்பிகொலம்போ விண்கலம்

புதன் கோளின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது பெப்பிகொலம்போ விண்கலம்


ADDED : நவ 23, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேப் கனாவெரல்: ஐரோப்பா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து அனுப்பிய 'பெப்பிகொலம்போ' என்ற இரட்டை விண்கலம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.

சூரியனுக்கு மிக அருகில் உள்ளதும் நம் நிலவை விட சற்றே பெரியதுமான கோள் புதனாகும். இக்கோளை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான மெர்குரி பிளானட்டரி ஆர்பிட்டரும், ஜப்பான் விண்வெளி நிறுவனமான மெர்குரி மேக்னெட்டோஸ்பெரிக் ஆர்பிட்டரும் இணைந்து, இரு ரோபோ ஆய்வு கலன்களுடன் கூடிய 'பெப்பிகொலம்போ' என்ற விண்கலத்தை, கடந்த 2018 அக்டோபர், 20 அன்று 'ஏரியன் - 5' என்ற ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவின.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக 1,000 கோடி கி.மீ., பயணத்துக்கு பின் நேற்று முன்தினம் புதன் கோளின் சுற்று வட்ட பாதையில் 'பெப்பிகொலம்போ' இரட்டை விண்கலம் நுழைந்தது. இதன் மூலம் சூரிய குடும்பத்தின் மிக அருகில் உள்ள கோளான புதனுக்கு சென்ற மூன்றாவது விண்கலம் என்ற பெருமை பெற்றது.

முன்னதாக கடந்த 1970களின் மத்தியில், நாசாவின் 'மரைனர் 10' விண்கலம் புதனை மூன்று முறை கடந்து சென்றது. அதன் பின் 2011ல் புதனின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசாவின் 'மெசெஞ்சர்' விண்கலம் எரிபொருள் தீர்ந்ததால், 2015ல் புதனில் மோதி செயலிழந்தது.

'மரைனர் 10' விண்கலம் திட்ட குழுவில் இடம்பெற்ற மறைந்த இத்தாலிய கணிதவியலாளர் கியூசெப் பெப்பி கொலம்போவின் நினைவாக இந்த இரட்டை விண்கலத்துக்கு பெப்பிகொலம்போ என பெயர் சூட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 16,800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான இந்த விண்கலத்தில் உள்ள இரு ரோபோ ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இவை தனித்தனியாக பிரிந்து, வெவ்வேறு உயரங்களில் இருந்து, அதீத வெப்பம் கொண்ட புதன்கோளை வரைபடமாக்கி ஆய்வு செய்ய உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us