விமான நிலையத்தில் மோதிக் கொண்ட விமானங்கள்: அமெரிக்காவில் பரபரப்பு
விமான நிலையத்தில் மோதிக் கொண்ட விமானங்கள்: அமெரிக்காவில் பரபரப்பு
UPDATED : நவ 15, 2026 06:08 PM
ADDED : நவ 15, 2026 05:46 PM

-சிறப்பு நிருபர்-
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையம் மிகவும் பரபரப்பானது. இங்கு பனாமா நகரில் இருந்து வந்த கோபா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இதில் 172 பேர் இருந்தனர். ஓடுபாதையில் வழக்கமான வேகத்தில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்றது.
அந்த விமான நிலையத்தில் இருந்து யுபிஎஸ் சரக்கு விமானம் , கொலம்பியாவின் பொகோடா நகருக்கு கிளம்பியது. அப்போது, இரு விமானங்களும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானம் மோதிய போது, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, ' விமானம் மீது யாரோ இடித்து விட்டார்கள்,' எனக்கூறியது பதிவாகியது.
யுபிஎஸ் சரக்கு விமானமும் மோதலை உறுதி செய்ததுடன், யாருக்கும் பாதிப்பு இல்லை எனக்கூறியுள்ளது. இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடக்கிறது.
