தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பிலிப்பைன்சில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விருந்தளித்தார் அதிபர்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விருந்தளித்தார் அதிபர்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விருந்தளித்தார் அதிபர்

2


UPDATED : நவ 16, 2026 10:57 PM

ADDED : நவ 16, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : நவ 16, 2026 10:57 PM ADDED : நவ 16, 2026 03:40 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

11 நாடுகள் உறுப்பினராக உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாடு பிலிப்பைன்சிஸின் மணிலா நகரில் நடக்கிறது. இந்தாண்டு, இம்மாநாட்டுக்கு பிலிப்பைன்ஸ் தலைமை வகிக்கிறது. இன்று முதல் நவம்பர் 18 வரை மாநாடு நடக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி மணிலா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்கும் வகையில் 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' என குரல் எழுப்பினார். சிறுவர்கள் வாழ்த்துப் பாடல் பாடினர். அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களை கைதட்டி பாராட்டினார். இந்திய வம்சாவளியினருடன் கைகுலுக்கி அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினானந்த் மார்கோஸ், ஆசியான் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.

மணிலாவில் உள்ள சர்வதேச கன்வென்சன் அரங்கில் நடக்கும் விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர், பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us