அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
UPDATED : நவ 25, 2025 05:12 PM
ADDED : நவ 25, 2025 09:07 AM

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் இன்று( நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றினார். முன்னதாக, ரோடு ஷோ வந்த அவருக்கு அயோத்தி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இன்று தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இதற்கென கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, காவிக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
ரோடு ஷோ
முன்னதாக, ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமலர் நேரலை ஒளிபரப்பு
அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றும் விழாவை நேரலையில் பார்க்க இங்கே கிளக் செய்யவும்.

