நவ. 24ல் பி.ஆர்.கவாய் ஒய்வு : உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யார்?
நவ. 24ல் பி.ஆர்.கவாய் ஒய்வு : உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யார்?
ADDED : அக் 23, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி கவாய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பிஆர் கவாய் மே 14 அன்று பதவியேற்றார். இவர் நவ., 24ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் புதிய தலைமைய நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி மூத்த நீதிபதியான சூரியகாந்த் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும், இவரது பெயரை ஒய்வு பெற உள்ள பி.ஆர். கவாய் முறைப்படி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.