தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் எப்படி செயல்படவேண்டும்: பிரஸ் கவுன்சில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் எப்படி செயல்படவேண்டும்: பிரஸ் கவுன்சில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் எப்படி செயல்படவேண்டும்: பிரஸ் கவுன்சில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2


ADDED : அக் 16, 2026 05:49 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 16, 2026 05:49 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: போராட்டக்களங்களில் செய்திகளை சேகரிக்கும் போது போலீசாரின் முறையான உத்தரவுகளை பின்பற்றுங்கள், வாக்குவாதங்களை தவிருங்கள் என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம் வருமாறு;

போராட்டங்களின் போது, பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் வழங்கி உள்ள அடையாள அட்டை, பத்திரிக்கை தகவல் மையம் அங்கீகார அட்டை அல்லது மாநில அரசின் தகவல் மற்றும் செய்தி வெளியீட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டையை அனைவருக்கும் தெரியும் வண்ணம் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமாக நகரும்போதோ அல்லது மோதல்களின் போதோ அடையாள அட்டை பாதுகாப்பாக கழுத்தில் அணிந்திருக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும். போலீசார் உங்களை அணுகும்போது, நீங்கள் பத்திரிகையாளர் என்பதை தெளிவாகவும், அமைதியாகவும் தெரிவிக்க வேண்டும்.

நடுநிலையை கடைபிடியுங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்காதீர்கள், யாருக்கும் ஆதரவாக செயல்படாதீர்கள். மோதல்களை தூண்டாதீர்கள். போராடுவோர், அவர்களை எதிர்ப்போர், போலீசாருடன் தலையீடாதீர்கள்.

மோதல்கள் ஏற்படும் இடங்களில் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருங்கள். நடமாட்டத்திற்கு இடையூறு அளிக்கும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், காவல்துறை தடுப்புகள், வாகனங்கள் அல்லது பிற இடங்களில் கேமராக்களை பொருத்த வேண்டாம். உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்குங்கள்.

ஆபத்து காலங்களில் தப்பிக்கும் வழிகளையும், இடங்களையும் முன்கூட்டியே யூகித்து வைத்துக் கொள்ளுங்கள். முதலுதவி மருந்து பொருட்கள், தனிப்பட்ட மருந்துகள், குடிநீர், அதிகம் புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டி, டார்ச்லைட், கைத்துண்டு, கண்களுக்கு பாதுகாப்பான கண்ணாடிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்.

போராட்டக்களங்களில் உள்ள சூழலை பொறுத்து, பாதுகாப்புக்காக தலைக்கவசம், உடல்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள், இந்த உபகரணங்கள் ஆபத்தான நடவடிக்கைகளை, செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடாது.

கண்ணீர்புகை குண்டுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை சூடாகவே இருக்கலாம், வெடிக்கலாம் அல்லது அபாயகரமான எச்சங்களை கொண்டு இருக்கலாம். எனவே அவற்றை தொடவோ, எடுக்கவோ, நகர்த்தவோ முயற்சிகள் எதுவும் எடுக்கக்கூடாது.

ஒதுக்கப்பட்ட பணி நேரம் முழுவதும் உங்களின் அலுவலகத்துடன் தொடர்பில் இருங்கள். செய்தியாளர்களை கண்காணிக்கவும், அவசரகாலங்களில் பதிலளிக்கவும் அவருடன் ஒருவர் தொடர்பில் இருப்பதை செய்தி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பகுதிநேர பணியாளர்கள், தங்கள் இருக்குமிடம், பணி, எப்போது அலுவலகம் திரும்புவார்கள் ஆகிய விவரங்களை ஆசிரியர் அல்லது அவருடன் இருக்கும் ஒருவருடன் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். நிகழ்வுகளை, துல்லியமாக, பாரபட்சமின்றி செய்தியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் கருத்துகள் போன்றவற்றை பல ஆதாரங்கள், தகவல்கள் வழியாக சரிபாருங்கள்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் தருணங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள், தப்பிக்கும் வழிகள் அல்லது நகர்வுகளை ஒளிபரப்பவோ, வெளியிடவோ வேண்டாம். மக்களின் எண்ணங்கள், உணர்ச்சிகளை யூகிப்பதை விடுத்து, கண்கூடாக காண்பவற்றை மட்டுமே விவரியுங்கள்.

சிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை படம்பிடிக்கும் போது, அடையாளம் காட்டும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தி வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்பு தொடர்பான முன் எச்சரிக்கைகளை மீறி, நேரடி ஒளிபரப்பு வாக்குறுதிகள், பிரத்யேக காட்சிகளை பெற அழுத்தம் தரவேண்டாம்.

இவ்வாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அறிவுறுத்தி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us