தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை வேளாண் இடுபொருட்கள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை வேளாண் இடுபொருட்கள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை வேளாண் இடுபொருட்கள்


UPDATED : அக் 16, 2026 05:47 PM

ADDED : அக் 16, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:47 PM ADDED : அக் 16, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரியில் மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மைக்கு இடு பொருட்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

கொச்சி மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம், துாய்மை இந்தியா சிறப்பு இயக்கம் 6.0ன் கீழ், பாகூர் பாரதிதாசன் நன்னீர் மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தில், மீன் கழிவுகளைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவன மூத்த விஞ்ஞானி சந்திரசேகர் வரவேற்றார். முதன்மை விஞ்ஞானி கீதாலட்சுமி, மீன் கழிவுகளை மேலாண்மை செய்து, சுற்றுப்புறத் துாய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து விளக்கினார்.

புதுச்சேரி மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோவிந்தசாமி, உள்நாட்டு மீன் வளர்ப்பு நடைமுறைகள் குறித்தும், வேளாண் துணை இயக்குநர் குமரவேல், பாகூர் வேளாண் அலுவலர் பரமானந்தன் ஆகியோர் மீன் கழிவுகளை வேளாண் இடுபொருட்களாக மாற்றி, விவசாய வளங்களை மறுசுழற்சி செய்வது குறித்து விளக்கினர்.

முதன்மை விஞ்ஞானி ஜினுதீன், விஞ்ஞானி இளவரசன் ஆகியோர், மீன் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மைக்கு இடு பொருட்களை தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கிரிஜா, செல்வராசு, பாரதிதாசன் நன்னீர் மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us