மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்பப் புதுமைப் போட்டி
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்பப் புதுமைப் போட்டி
UPDATED : அக் 16, 2026 06:11 PM
ADDED : அக் 16, 2026 06:07 PM

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி, புதுச்சேரி போலீஸ் துறையுடன் இணைந்து, ‘புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026” என்ற தலைப்பில், தொழில்நுட்பப் புதுமைப் படைப்பு போட்டியை நடத்தின.
‘ஹேக் பார் எ காஸ்’ என்ற கருப்பொருளில் நடந்த நிகழ்ச்சியை, கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக, சீனியர் எஸ்.பி.,கள் ராகவ், கலைவாணன், தீபிகா, திவ்யா, எஸ்.பி., ஸ்ருதி யரகட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
நடுவர்களாக, ஓசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடக்ட் நிறுவன தலைமைப் பொறியாளர் ராஜேஷ், புதுச்சேரி அடல் இன்குபேஷன் சென்டர் தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன், ஜே.எஸ்.ஐ.பி., டிசைன் சொல்யூஷன் நிறுவன அறிவுசார் சொத்துரிமை வழிகாட்டி ஜெயக்குமார், பி.ஏ.பி. ஹார்டுவேர் அண்ட் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜயானந்த் தேவதாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் துறைசார் முன்மொழிவுகளை நிர்வகித்தல் மற்றும் முந்தைய ஆவணங்கள் தேடி பெறும் போட்டியில், மணக்குள விநாயகர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் முறையே முதல் மற்றும் 2ம் இடம், ராக் கல்லுாரி மூன்றாம் இடம் பிடித்தன.
புவியியல் தகவல்களின் அடிப்படையில் குற்றத் தகவல்களைப் பகுப்பாய்வு போட்டியில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல் இடம், புதுச்சேரி பல்கலை ளம் இடம் பிடித்தன.
நவீன வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து விதிமுறை அமலாக்கம் மற்றும் பொதுமக்கள் புகாரளிக்கும் அமைப்புக்கான போட்டியில், மணக்குள விநாயகர் தொழில் நுட்பக் கல்லுாரி முதல் இடம், கிறிஸ்ட் கல்லுாரி 2ம் இடம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி 3ம் இடம் பிடித்தன. போதை மருந்துகள் மற்றும் மனநிலையைப் பாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் களப் பரிசோதனையில் கண்டறியும் கையடக்க அமைப்புக்கான போட்டியில், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி அணிகள் முதல் மற்றும் 2ம் இடத்தை பிடித்தன.
ஏற்பாடுகளை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை டீன் வள்ளி, வேலைவாய்ப்பு துறை டீன் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்திருந்தனர்.
