UPDATED : அக் 16, 2026 06:11 PM
ADDED : அக் 16, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில்,
கோட்டுச்சேரி பூவம் சாராயக்கடை அருகில் மயிலாடுதுறை, சீர்காழி திட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 48, என்பவர் பூவம் நண்டலாறு பகுதியில் உள்ள சாராயக் கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், அங்கு இறந்து கிடந்தார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
